சுற்றிவளைப்புக்களினால் அரசாங்கத்திற்கு 470 பில்லியன் ரூபா வருமானம்!
கடந்த வருடம் மேற்கொண்ட சுற்றிவளைப்புக்களினால் அரசாங்கத்திற்கு 470 பில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக சுங்கப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
கடந்தவருடம் 15 கோடி ரூபா பெறுமதியான 25 கிலோகிராம் தங்கம் கைப்பற்றப்பட்டதாக சுங்கப் பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்தார். சட்டவிரோதமான முறையில் நாட்டிலிருந்து தங்கம் கொண்டுசெல்லப்பட்ட 290 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அவர் கூறினார்.
குற்றமிழைத்தவர்களிடம் இருந்து 54 இலட்சம் ரூபா பணம் அபராதமாக அறவிடப்பட்டதாகவும் சுங்கப் பேச்சாளர் தெரிவித்தார்.
சுங்கப் பிரிவினரால் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் மற்றும் பொருட்கள் விலைமனுக் கோரல் மூலம் விற்பனை செய்யப்பட்டு, அரசாங்கத்திற்கு 70 கோடி ரூபா பணம் செலுத்தப்பட்டுள்ளது.
நாட்டின் கலாசாரம் மற்றும் பல்வகைமையை சீர்குலைக்கும் வகையில் வெண் சந்தனம், வல்லபட்டை, புராதன பொருட்கள், உயிரினங்கள் கொண்டுசெல்லப்பட்ட 35 சம்பவங்கள் பதிவானதாக லெஸ்லி காமினி குறிப்பிட்டார்.
அத்துடன் இந்தக் காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில் 294 கிலோகிராம் ஹெரோய்ன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக சுங்கப் பிரிவு மேலும் சுட்டிக்காட்டியது.
(NF)
0 comments :
Post a Comment