Monday, January 27, 2014

இத்தாலிக்கு 45 நாட்களில் அனுப்புவதாக கூறி பல பேரை மோசடி செய்த குடும்பம்!!

இத்தாலிக்கு தொழில் வாய்ப்பிற்காக அனுப்புவதாக கூறி நிதி மோசடி செய்யப்பட்டமை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் ஏராளமானவர்கள் பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகி ன்றனர். யாழ்ப்பாணம் உட்பட ஜா-எல, வத்தளை, பொரளை, மினுவாங்கொடை, அம்பிலிப்பிட்டிய ஆகிய பிரதேசங்களில் உள்ள மக்கள் இவ்வாறான நிதிமோசடிகளில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போலியான ஆவணங்கள் முன் வைக் கப்பட்டு 45 நாட்களுக்குள் இத்தாலிக்கு அனுப்புவதாக கூறி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகன் மற்றும் மகள் ஆகியோர் இந்த மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

சில தரப்பினரிடம் 20 லட்சம் ரூபா வரையில் மோசடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பில் தமது பிரதேசங்களில் உள்ள காவல்நிலையங்களில் முறையிட் டுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர். குறித்த மோசடி குழு ஜா-எல – துடெல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளனர். இதே வேளை மலேசியாவுக்கு தொழில்வாய்ப்பிற்காக செல்லும் அனைத்து இலங்கைய ர்களிடமும் தொழில் ஒப்பந்தம் மற்றும் மலேசிய அரசின் தொழில் வீசா அனுமதிப் பத்திரம் என்பன இருக்க வேண்டியது அவசியம் என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. சில தரப்பினர் போலியான தகவல்களை வழங்கி மோசடியான வகையில் மலேசியாவுக்கு தொழில்வாய்ப்பை பெற்றுச் செல்வதாக பணியகத்தின் பிரதி முகாமையாளர் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com