தற்போதைய அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழந்துள்ள பிரபல அமைச்சர்கள் 40 – 45 பேர் அரசாங்கத்திலிருந்து விலகிச் செல்வதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் தலைவர்களில் ஒருவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ருவன் விஜேவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.
மினுவங்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற பொதுக்கூட்டமொன்றின் போதே பா.உ. இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.
“ஐக்கிய தேசியக் கட்சியினுள் பிரச்சினை என்று அரசாங்கம் சொல்கிறது. உண்மை என்னவென்றால் அரசாங்கத்தினுள்ளேதான் பெரும் பிரச்சினை உள்ளது. ஆளும் கட்சியில் நம்பிக்கை இழந்துள்ள 40 – 45 பேரளவில் கட்சியிலிருந்து விலகிச் செல்லக்கூடிய வாய்ப்பு உள்ளது.
ஐதேகாவினுள் பெரும் பிரச்சினைகள் இல்லை. அவ்வப்போது தோன்றுகின்ற சின்னஞ்சிறு பிரச்சினைகள் பேசித் தீர்க்கப்படுகின்றன. ஐதேகாவிற்கல்ல இப்போது பிரச்சினை எழுந்திருக்கிறது. ஆளும் கட்சிக்கே. ஐதேகாவை பலம் பொருந்தியதாக மாற்ற ஆளும் கட்சியிலிருந்து அமைச்சர் வர முன்வந்துள்ளார்கள். ஐக்கிய தேசியக் கட்சியினுள்ளே உள்ள சின்னஞ் சிறு பிரச்சினைகளை வெகுவிரைவில் தீர்த்துக் கொள்ளுமாறு அவர்கள் சொல்கிறார்கள். சஜித்தும் தலத்தாவும் தலைமைத்துவ சபையில் இருக்க வேண்டியவர்கள்.
சீனாவிலிருந்து அரசாங்கம் கடன்பெற்று மாட்டிக் கொண்டு விழிக்கிறது. எனவேதான் வரி அதிகரிக்கின்றது. மிகச் சிறந்த ஐந்து கஸினோ கட்டடங்கள் கடானியில் நிர்மாணிக்கப்படவுள்ளன. கிராமப் புற மக்கள் கஸினோவுக்கு அடிமைப்பட்டால் குடும்பங்களில் பொருளாதார இயல்பாகவே வீழ்ச்சியடையும். வெளிநாட்டவர்கள் கஸினோ விளையாட வர மாட்டார்கள். எதிர்காலத்தில் ஐதேக ஆட்சியின் கீழ் நாட்டில் நடைபெறுகின்ற அநியாயங்களை இல்லாமல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
(கேஎப்)
No comments:
Post a Comment