30 வயது குடும்பஸ்தர் யாழ். பண்ணைக்கடலில் சடலமாக மீட்பு!
யாழ்ப்பாணம் பண்ணைக்கடலில் ஊர்காவற்றுறையைச் சேர்ந்த வயரிங் வேலை செய்பவரும் ஒருபிள்ளையின் தந்தையுமான அருள் மதன் (வயது 30) என்பவரது சடலம் இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது நேற்று யாழ். பண்ணைக் கடலில் சடலம் ஒன்று மிதப்பதைக் கண்ட மீனவர்கள் பொலிஸாரிடம் முறையிட்டிருக்கின்றனர் இருந்தும் கடல் கரையில் காணப்பட்ட சடலம் பொலிசார் வருவதற்கு முன் கடல் நீரோட்டம் காரணமாக சடலம் நகர்ந்து மறைந்திருந்த நிலையில் நேற்று முதல் தேடுதல் நடத்திய பொலிஸாரும் மீனவர்களும் இன்று காலையிலையே சடலத்தை மீண்டுள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் நேற்று முன்தினம் பிற்பகல் யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை நோக்கிச் செல்வதற்காக நின்றிருந்ததாக அவரை இறுதியாகாகக் கண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் குடும்பஸ்தரின் மரணம் தொடர்பில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ள பொலிசார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
0 comments :
Post a Comment