29 இல் தேர்தல் நடாத்துவது ஜனாதிபதியின் கபட நாடகமே! - அநுர திசாநாயக்க
ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான பிரேரணை கொண்டுவரப்படவுள்ள 28 ஆம் திகதிக்கு அடுத்த நாளாகிய 29 ஆம் திகதிக்கு தேர்தல்களை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நடாத்துவது அவரது சூழ்ச்சியேயாகும் என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் அநுர திசாநாயக்க குறிப்பிட்டார். திக்குவல்லையில் நடைபெற்ற கூட்டமொன்றின்போதே அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு கருத்துரைக்கும்போது பா.உ. அநுர திசாநாயக்க,
“ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக பிரேரணை கொண்டுவரப்படுகிறது. அது இலங்கை நேரப்படி மார்ச் 28 ஆம் திகதி இரவு 7 மணிக்கு. அது அவ்வாறிருக்க மகிந்த ராஜபக்ஷ 29 ஆம் திகதி தேர்தலை வைக்கச் சொன்னார்.
செப்டம்பர் மாதம் நடாத்தப்பட வேண்டிய தேர்தலை ஏன் மார்ச்சில் கொண்டுவந்தார்? மனித உரிமைகள் ஆணையகத்தின் பிரேரணை வெற்றிபெற்றவுடன் இரவு தொலைக்காட்சியில் அவர் வருவார்… வந்து சொல்வார் “என்னை மின்சாரக் கதிரையில் அமர்த்தப்பார்க்கிறார்கள் தயவுசெய்து நாளை காலையில் வாக்குச் சாவடிக்குச் சென்று வெற்றிலைகு வாக்களியுங்கள்“ என்று.
வெளிநாட்டுத் தலையீடுகளுக்கு மகிந்தர் மிக்க விருப்பம். ஏன் தெரியுமா? அப்போதுதான் அதுபற்றி பொதுமக்களை எடுத்துச் சொல்லி வாக்குகளையெல்லாம் சுருட்டிக் கொள்ளலாம். அதனைத்தான் செய்துகொண்டு செல்கிறார். அதற்காகத்தான் தேர்தலை 29 இல் வைக்கிறார்”
என்றும் குறிப்பிட்டுள்ளார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment