Tuesday, January 21, 2014

2011 ஏப்ரலிற்கு பின்னர் இந்திய மீனவரெவரும் இலங்கை கடற்படையால் படுகொலை செய்யப்படவில்லை - இந்திய மத்திய அரசாங்கம்!

இலங்கைக்கு யுத்த கப்பல்களை வழங்குவது தமிழ் நாட்டு மீனவர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் இல்லை

2011 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு பின்னர் எந்தவொரு இந்திய மீனவரும் இலங்கை கடற்படையினரால் படு கொலை செய்யப்படவில்லையென இந்திய மத்திய அரசா ங்கம் இந்திய நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. இதே நேரம் தடை செய்யப்பட்ட மீனவ உபகரணங்களை பயன் படுத்தி இலங்கை கடல் எல்லையில் மீன்பிடித்த 25 இந்திய மீனவர்கள் வட கடலில் கைது செய்யப்பட்டனர்.

இலங்கைக்கு யுத்த கப்பல்களை வழங்குவது தமிழ் நாடு மீனவர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் இல்லை என சென்னை நீதிமன்றத்திற்கு அனுப்பும் மனு ஒன்றிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு யுத்த கப்பல்கள் விற்பனை செய்யப்படவில்லையென்றும் கரையோர பாதுகாப்பு படகுகள் மாத்திரமே வழங் கப்பட்டுள்ளதாகவும் இந்திய அரசாங்கம் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

இலங்கை கடற்படையினர் அவர்களது கடல் எல்லையில் மாத்திரமே ரோந்து நடவடிக்கையில்ஈடுபடுவதனால் தமிழ் நாடு மீனவர்களுக்கு எவ்வித அச்சுறுத் தலும் இல்லையென தெரிவித்துள்ளது. இதனால் இந்த மனுவை நிராகரிக்குமாறு இந்திய அரசாங்கம் சென்னை நீதிமன்றத்தை கோரியுள்ளது.

இதே நேரம் நேற்று இரவு இலங்கை கடற்படையினரால் நெடுந்தீவுக்கு அருகில் 25 மீனவர்கள் கைது செய்யப்பட்;டனர். அத்துடன் 6 படகுகளையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லையை அத்து மீறுவது தொடர்பாக தொடர்ந்தும் பேச்சுவார்த்தகைள் நடைபெற்ற வருகின்ற போதும் இம்மீனவர்கள் இலங்கை கடல் பகுதியில் தடை செய்யப்பட்ட வலைகள் மற்றும் உபகரணங்களை பயன்படுத்தி கடற்றொழிலில் ஈடுபடுகின்றனர்.

இதனால் இலங்கை கடல் வளம் பாதிக்கப்படுவதாக இலங்கை கடற்படை தெரி வித்துள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன்துறை மீன்பிடி துறை முகத்திற்கு அழைத்து வரப்பட்டு யாழ் மாவட்ட கடற்றொழில் அலுவலகத்தில் ஒப்படைக்கப்படவுள்ளதாக கடற்படை பேச்சாளர் கமான்டர் கோசல வர்ண குலசேகர தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com