சிவனொளிபாதமலை உச்சியில் தூண்டா – காண்டாமணி விளக்குகள் 20,000 KG (படங்கள்)!!
சிவனொளிபாதமலைக்கு எதிர்வரும் 5 ஆம் திகதி ஞாயிற்று க்கிழமை வரை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை யான நேரத்தில் செல்வதனை தவிர்த்துக் கொள்ளுமாறு யாத்தி ரர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
சிவனொளிபாத மலை உச்சியில் தூண்டா மணி விளக்கு, காண்டாமணி ஆகி யன பொருத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதனால், மேலே குறிப்பிட்ட நேரத்தில் அங்கு செல்வதனை தவிர்த்து கொ ள்ளுமாறு சிவனொளி பாதமலையின் விஹாராதிபதி பெங்க முவே தம்மதின்ன தேரர் தெரிவித்துள்ளார்.
சுமார் 20,000 கிலோவிற்கு மேற்பட்ட நிறையுள்ள பொருட்களே சிவனொளி பாத மலையின் உச்சிக்கு கொண்டுசெல்லப்படவிருக்கின்றது. இந்த பொருட்கள் லக்ஸ பான வாழைமலை தோட்ட மைதானத்திலிருந்து எம்.ஐ 17 ரக ஹெலிகொப்டரில் மலை உச்சிக்கு இலங்கை விமானப்படையினரால் இன்று வியாழக்கிழமை காலை முதல் கொண்டு செல்லப்படுகின்றன. பனி மூட்டம் இல்லாத நேரங்களில் ஒரு தடவைக்கு 1000 கிலோ அல்லது 2000 கிலோ நிறையுள்ள பொருட்கள் மலை யுச்சிக்கு கொண்டு செல்லப்படவிருக்கின்றது என்று விமானப்படையினர் தெரி வித்தனர்.
0 comments :
Post a Comment