உலகளாவிய வேலையின்மை 200 மில்லியனுக்கு மேல் உயர்கிறது. By Mike Head
ஓர் ஐ.நா. அமைப்பான, சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) படி, உத்தியோகபூர்வ உலகளாவிய வேலையின்மை கடந்த ஆண்டு முதல் தடவையாக 200 மில்லியனுக்கு மேல் உயர்ந்துள்ளது, இது 2008ல் வெடித்த உலகப் பொருளாதார நெருக்கடியின் ஆழ்ந்த தாக்கத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
21 அன்று வெளியிடப்பட்ட தன் "உலகளாவிய வேலைவாய்ப்பு போக்குகள்" (Global Employment Trends) என்ற ஆண்டு அறிக்கையில், 201.8 மில்லியன் மக்கள் 2013ல் வேலையற்று இருந்தனர் என்றும் இது ஓராண்டில் கிட்டத்தட்ட 5 மில்லியன் அதிகமாகிவிட்டது என்றும் ILO கூறுகிறது. இது 2009 ன் மிக அதிக நிலைச்சான்றான 198 மில்லியனையும் விஞ்சிவிட்ட ஒரு ஒரு புதிய உயர்நிலை எண்ணிக்கயாகும்.
இளஞர்கள் மிகப் பெரிய பாதிப்பிற்கு உட்பட்டுள்ளனர், 2013ல் 15க்கும் 24 வயதிற்கும் இடையில் வேலையற்றோரான 74.5 மில்லியன் உடன், இது 700,000 அதிகரிப்பாகும். 2007ல் இருந்ததை விட அதிர்ச்சியளிக்கும் வகையில் 37.3 மில்லியன் இளைஞர்கள் குறைவாகத்தான் 2013ல் வேலையில் இருந்துள்ளனர்.
இது உலக முதலாளித்துவத்திற்கு மிக இழிவான குற்றச்சாட்டாகும். நிதியச் சரிவிற்கு ஐந்து ஆண்டுகளுக்குப்பின், இளைஞர் வேலையின்மை விகிதம் 13.1 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது ஒரு “வரலாற்றுத்தன்மை உடைய உச்சக்கட்டம்” – முழுத் தொழிலாளர் தொகுப்பான 6.1 வீதத்தைவிட இரு மடங்கு அதிகமாகும்; வயதுவந்தோர் விகிதமான 4.6% ஐப் போல் கிட்டத்தட்ட மூன்று மடங்கு ஆகும்.
யூரோப் பகுதியில் வேலையின்மை மிகத் தீவிரமாக இருந்துள்ளது; இங்கு வேலையில்லாதவர் சதவிகிதம் நவம்பர் மாதம் எட்டாவது தொடர்ச்சியான மாதமாக 12.1% ஐ சுற்றியிருந்தது. வேலயின்மை விகிதம் 12.2% என வட ஆபிரிக்கா மிகவும் பாதிக்கப்பட்ட பகுதியாக இருந்தது, அதைத்தொடர்ந்து மத்தியகிழக்கு 10.9%ல் இருந்தது, வட அமெரிக்கா மற்றும் பிற வளர்ச்சியுற்ற பொருளாதாரங்கள் 8.6%ல் தொடர்ந்து வந்தன.
இப்புள்ளிவிவரங்கள் ஐயத்திற்கு இடமின்றி உண்மையான வேலையின்மை அளவை குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றன; ஏனெனில் இவை உத்தியோகபூர்வ அரசாங்கப் புள்ளி விவரங்களை நம்பியுள்ளன; அவை வேலையின்மை நலன்கள் முடிந்தவர்களைக் கணக்கில் கொள்வதில்லை; வாரத்திற்கு ஒரு சில மணி நேரம் மட்டும் வேலை செய்பவர்கள் மற்றும் வேலை தேடுவதை நிறுத்தியவர்களை கணக்கில் கொள்வதில்லை.
மோசமான போக்கை விளக்க முயற்சிக்கையில், ILO "வேலையின்மை மீட்பு" என்னும் சொற்றொடரைப் பயன்படுத்தியுள்ளது. அது, பெருநிறுவன இலாபங்கள் மற்றும் பங்குச் சந்தை விலைகள் ஏற்றம் கண்டபோதிலும், குறைந்தப் பட்சம் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு இன்னும் அதிக வேலையின்மை இருக்கும் என எச்சரித்துள்ளது. இதன் கணிப்புக்கள், உலகம் முழுவதும் உள்ள அரசாங்கங்கள் “மீட்பு” க்கு நடத்தும் கற்பனை முயற்சிகளை இன்னும் அம்பலப்படுத்துகிறது.
“தொடர்ந்து மிக நம்பிக்கை கொண்ட” சர்வதேச நாணய நிதியத்தின் உலகப் பொருளாதார வளர்ச்சி, 2013ல் 2.9% இருந்து 2014ல் 3.6 க்கு அதிகரிக்கிறது என்ற தளத்தைக் கொண்டாலும், ILO வேலையின்மை எண்ணிக்கை 2018ஐ ஒட்டி 215 மில்லியன் ஆகும் எனக் கூறுகிறது. எனினும், "ஒரு நிலையான பொருளாதார மீட்பை மீண்டும் உருவாக்குவதில் தவறுமானால்", அந்த எண்ணிக்கை 220 மில்லியன் ஆக உயரும் என்றும் கூறுகிறது.
ஐ.நா. நிறுவனம் உலக நிதியச் சந்தைகளில் ஏற்றத்திற்கும் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் மோசமான நிலைக்கும் இடையே உள்ள பகிரங்கமான வேறுபாட்டையும் குறிப்பிடுகிறது. ILO வின் தலைமை இயக்குனர் கே ரைடர் “பெருநிறுவன இலாபங்கள் பெருகியுள்ளன, உலகப்பங்குச் சந்தைகள் மற்றொரு செழிப்பான ஆண்டை எதிர்பார்க்கின்றன. ஆனால் வணிகங்கள், உற்பத்தித்திறனில் முதலீடு செய்வதற்கு அல்லது வேலைகளைத் தோற்றுவிப்பதற்குப் பதிலாக, பணத்தை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருக்கின்றன அல்லது தங்கள் சொந்தப் பங்குகளை வாங்குகின்றன” என்று கூறியுள்ளார்.
ரைடர் இந்த செயல்முறைகள், “இன்னும் ஒருவேளை ஆழ்ந்த சமூக அமைதியின்மைக்கு விதைகளை தூவுகின்றன” என்று எச்சரித்தார். அவருடைய கருத்துக்கள் ஆக்ஸ்பாம் அறிக்கையை தொடர்கின்றன; அந்த அறிக்கை, உலகின் 85 மிகப் பெரிய செல்வந்தர்கள், உலக மக்கள் தொகையில் பாதிப்பேரின் (அதாவது 3.5 பில்லியன் மக்கள்!) செல்வ வளத்திற்கு இணையான செல்வத்தைக் கட்டுப்பாட்டில் கொண்டிருப்பதாக குறிப்பிடுகின்றது.
ILO, FTSE உலக அனைத்து உச்ச வரம்பு குறீயிட்டை மேற்கோளிட்டுள்ளது; அது 7,200 பொது வணிகப் பங்குகள் 47 நாடுகளில் இருப்பதை ஆராய்கிறது. இந்தக்குறியீடு ஆண்டில் 18%க்கும் மேலாக டிசம்பர் 2013 வரை ஆதாயம் பெற்றுள்ளது; மார்ச் 2009 ல் அடைந்த குறைவான நிலையை விட 158% உயர்ந்துள்ளது. ஆயினும்கூட வேலையின்மை வளர்ந்துள்ளது, பெருநிறுவனங்கள் பங்குதாரர்களுக்கு வெகுமதி கொடுத்துள்ளனர், அரசாங்கங்கள் வேலைகள் இழப்பை ஒட்டி தொடர்ந்து சிக்க நடவடிக்கைகளை சுமத்துகின்றன.
உலக நிதிய நெருக்கடியால், தொழிலாளர் சந்தை “ஆழ்ந்த அடிபெற்றுள்ளது” என்று சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) கூறுகிறது. உலகளாவிய வேலைவாய்ப்பு 40 மில்லியன் வேலைகளை சேர்த்து, 2013 ல் வெறும் 1.4 சதவீதம்தான் உயர்ந்துள்ளது, ஆனால் அது ஒவ்வொரு ஆண்டும் தொழிலாளர் சந்தையில் சேருபவர்கள் என எதிர்பார்க்கப்படும் 42.6 மில்லியன் மக்களுக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. “இதன் விளைவாக நெருக்கடி தொடர்புடைய உலக வேலைகள் இடைவெளி நெருக்கடிக்கு முந்தைய போக்குகளுடன் இழக்கப்பட்ட வேலைகளுடன் ஒப்பிடுகையில், இன்னும் அதிகமாக 62 மில்லியன் தொழிலாளர்கள் 2013ல் என ஆகியுள்ளது.”
மொத்த உத்தியோகபூர்வ வேலையின்மைக்கு மேலாக 23 மில்லியன் “ஊக்கம் அற்ற தொழிலாளர்கள்” என மதிப்பிடப்பட்டுள்ளவர்கள் தொழிலாளர் தொகுப்பில் இருந்து கைவிடப்பட்டுள்ளனர் அல்லது கடுமையான வேலை வாய்ப்புக்களை ஒட்டி ஒதுங்கி விட்டனர். 2018 ஐ ஒட்டி, “உலக இடைவெளி 81 மில்லியனுக்கு உயரும்; இதில் கிட்டத்தட்ட 30 மில்லியன் ஊக்கம் அற்ற தொழிலாளர்கள் அடங்குவர், இவர்கள் தொழிலாளர் சந்தைக்கு வரவே மாட்டார்கள்” என கணிக்கப்பட்டுள்ளது.
இளைஞர்கள தொடர்ந்து குறிப்பாக “சீரற்ற மீட்பினால்” பாதிக்கப்படுவர். இளைஞர் வேலையின்மை விகிதத்தில் மிக அதிக ஏற்றம் மத்திய கிழக்கில் உள்ளது, அங்கு அது 27% க்கும் மேலாகப் போய்விட்டது. மத்திய மற்றும் தென்கிழக்கு ஐரோப்பா, முன்னாள் சோவியத் அரசுகள், கிழக்கு, தென்கிழக்கு ஆசியா, பசிபிக் மற்றும் வட ஆபிரிக்கா அனைத்தும் கணிசமான அதிகரிப்பைக் கண்டுள்ளன.
இதைத்தவிர, வேலையில் இல்லாத இளைஞர்களின் விகிதம், கல்வி அல்லது பயிற்சி அற்றவர்கள் (NEETs) தொடர்ந்து உயர்கிறது. துருக்கியின் விகிதம் கிட்டத்தட்ட 35%, மெக்சிகோவுடையது 25%. ஐரோப்பாவில் சில மோசமான விகிதங்களில் உள்ளன. ஸ்பெயின், இத்தாலி, கிரேக்கம், மற்றும் அயர்லாந்து ஆகியவற்றில் ஐந்து பேரில் ஒருவருக்கும் மேல், கல்வி அல்லது பயிற்சி அற்றவர்கள் (NEETs) ஆக உள்ளனர்.
இந்த புள்ளி விவரங்கள், பல நேரமும் சமூகப்பாதுகாப்பு அல்லது சுகாதாரப் பாதுகாப்பு இன்றி, பெருகும் தொழிலாளர் எண்ணிக்கை பாதுகாப்பற்ற, குறைவூதிய வேலையில் உள்ளது என்ற உண்மை நிலவரத்தை இன்னமும் மறைக்கின்றன;
ILO கருத்துப்படி, “பாதிப்பு ஏற்படக்கூடிய வேலை”, அதாவது சுய வேலை அல்லது குடும்பத் தொழிலாளர் பங்களிப்பு மூலம் சுய வேலைவாய்ப்பு என்பது இப்பொழுது கிட்டத்தட்ட மொத்த வேலைகளில் 48% என உள்ளது. “கூலி வேலைப் போக்குகளுக்கு முற்றிலும் மாறாக, பாதிப்பு ஏற்படக்கூடிய வேலை உலகெங்கிலும் 13.4 மில்லியனாக 2013ல் அதிகரித்துள்ளது. இது 2012ல் 5.3 மில்லியனாகவும் ஆகவும், 2011ல் 3.3 மில்லியனாகவும் இருந்தது என்று அறிக்கை கூறுகிறது.
ILO வினால் “உழைக்கும் வறியவர்” என்று வகைப்படுத்தப்பட்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை முந்தைய தசாப்தங்களை காட்டிலும் மெதுவான விகிதத்தில், சற்றே குறைந்துள்ளது. 2013 ஆம் ஆண்டில், ஒரு மதிப்பீட்டின்படி, 375 மில்லியன் தொழிலாளர்கள் —உலகத் தொழிலாளர் தொகுப்பில்11.9%— நாள் ஒன்றிற்கு 1.25க்கும் குறைவான அமெரிக்க டாலருடன் வாழ்கின்றனர்; அதே நேரத்தில் 839 மில்லியன் தொழிலாளர்கள் —26.7% — நாள் ஒன்றிற்கு 2 அமெரிக்க டாலருடன் அல்லது அதற்கும் குறைவாகப் பெற்று வாழத்தள்ளப்பட்டுள்ளனர்.
இப்பார்வை நீண்டகால வேலையற்றோருக்கு சரிந்துவிட்டது. “பல முன்னேறிய பொருளாதாரங்களில் வேலையின்மைக்காலம், நெருக்கடிக்கு முந்தைய நிலைமையுடன் ஒப்பிடும்போது இருமடங்கு ஆகிவிட்டது” என்று ILO கூறுகிறது. சராசரி வேலையிமைக் காலம் கிரேக்கத்தில் 9மாதங்கள் என்றும் ஸ்பெயினில் 8மாதங்கள் என்றும் உள்ளன. “பொருளாதார மீட்பிற்கு ஊக்கம் தரும் அடையாளங்கள் வந்துள்ள நாடுகளில் கூட, அமெரிக்கா போன்றவற்றில், நீண்டகால வேலையின்மையில் உள்ளோர், அனைத்து வேலை தேடுவோரில் 40%க்கும் மேலாக உள்ளனர்.
அதன் அறிக்கை முழுவதும் ILO வின் முக்கிய கவலை, ஆழ்ந்த வேலையின்மையின் மனித இழப்பு என்று இல்லாமல், பொருளாதார வளர்ச்சியின் உட்குறிப்புக்கள் மற்றும் அரசியல் அதிருப்தி என உள்ளன. வெற்றுத்தனமாக, அரசாங்கங்கள் நிதானமான “ஆக்கிரோஷ” சிக்கன நடவடிக்கைகளை தொடர வேண்டும், அதுதான் “நிறுவனங்களுக்கு தேவையான விரிவாக்கம், வேலை தோற்றுவித்தலுக்கு ஊக்கம் கொடுக்கும்”, “தொழிலாளர்களுக்கு பொருளாதார வளர்ச்சியின் சரிவுப் பங்கு போகாமல் காக்கும்” என்று கூறுகிறது.
அதன் உத்தேச “பெரிய பொருளாதாரக் கொள்கைகள் மறுசீரமைப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும்” என்பது நடந்தாலும், ILO காட்டியுள்ள மாதிரி அதிக வருமானம் உடைய G20 நாடுகளில் வேலையின்மை 2020ஐ ஒட்டி 1.8 சதவிகித புள்ளிதான் குறைந்திருக்கும், 200 மில்லியன் பேரை வேலையில் இருந்து அகற்றியிருக்கும்.
ஆனால் பொருளாதாரக் கொள்கையில் அத்தகைய மிருதுத்தன்மைக்கு எந்த வாய்ப்பும் இல்லை. ILO வின் அறிக்கையே ஆவணப்படுத்துவது போல், ஆளும் உயரடுக்குகளும் அவற்றின் உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்களும் பொருளாதார வீழ்ச்சியின் சுமைகளை தொழிலாள வர்க்கத்தின் முதுகில் சுமத்த முற்படுகின்றன.
0 comments :
Post a Comment