புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்ட லயன் எயார் விமானத்தில் பயணித்தவர்களின் 12 உடமைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
1998ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 29ம் திகதி பலாலி விமான நிலையத்திலிருந்து இரத்மலானை நோக்கி பறந்த லயன் எயார் எனும் தனியார் விமானம் இரணைமடு வான்பரப்பில் பறந்து கொண்டிருந்த போது விடுதலை புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டது.
4 சிப்பந்திகள் உட்பட 52 பேர் இச்சம்பவத்தில் பலியானா ர்கள். மேற்படி இரணைமடு கடற்பரப்பில் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தின் பகுதி கள் இரணைமடு கடற்பகுதியிலிருந்து மீட்கப்பட்டது. மேற்படி விமானத்திலிருந்து மீட்கப்;பட்ட 72 தடய பொருட்கள் கடந்த இரு தினங்களாக யாழ் மாநகர சபை பொது மைதானத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
இவற்றை பார்வையிட்டவர்களில் சிலர் தமது உறவினர்கள் இந்த விமானத்தில் பயணம் செய்ததாக கூறி அவர்களது உடமைகள் என தெரிவித்து சில பொருட்களை அடையாளம் காட்டியுள்ளதாக இதனை ஏற்பாடு செய்திருந்த சட்ட வைத்திய அதிகாரி பிரசன்ன தசநாயக்க தெரிவித்தார்.
இவ்வாறு காட்சிப்படுத்தப்பட்டிருந்த 72 தடய பொருட்களில் 12 தடய பொருட்கள் யாருடையது என அடையாளம் காணப்பட்டது எனவும் இவை தொடர்பான அறிக்கைகளை தாம் சட்ட வைத்திய திணைக்களத்திடம் கையளிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment