கனடாவில் வசிக்கும் யாழ். இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம் மல்லாகத்தைச் சேர்ந்த இளம் யுவதி ஒருவரை திருமணம் செய்து அவரிடமிருந்து 15 லட்சம் ரூபாவை சீதனமாகவும் பெற்றுக்கொண்டு ஒரே மாத காலத்தில் அவரை விட்டுச் சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் தெரிய வருவதாவது,யாழ். மல்லாகத்தைச் சேர்ந்த குறித்த யுவதிக்குப் பெற்றோர் வரன் பார்த்துள்ளனர். இந்நிலையில் கனடாவைச் சேர்ந்த மேற்படி இளைஞனின் சாதகம் பொருந் தியுள்ளது. இளைஞனின் தந்தையும் பொறுப்புமிக்க நிதி நிறுவனம் ஒன்றில் தொழில் பார்த்தவர் என்ற நிலையில் திருமணம் இரு வீட்டாரின் பரிபூரண சம்மதத் துடன் பேசி முடிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் 9ம் திகதி யாழ்ப்பாணத்தில் திரு மணம் வெகு சிறப்பாக நடைபெற்றது. சுமார் ஒரு மாத காலம் குறித்த இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்துள்ளனர். இறுதியில் தான் கனடா செல்ல வேண்டும் என்று அந்த இளைஞன் புறப்பட்டுள்ளான்.
அதேவேளை குறித்த யுவதியை வெள்ளவத்தையிலுள்ள தனது பெற்றோருடன் விட்டுச் சென்றுள்ளான். இந்நிலையில் இளைஞனின் பெற்றோர் மேலும் 25 லட்சம் ரூபா உடனடியாக வைக்க வேண்டும். இல்லையேல் மகன் தொடர்பு கொள்ள மாட்டார் என மிரட்டியுள்ளனர்.
காசு இல்லை என்றதும் காணியை விற்றாவது கொடுக்குமாறு வற்புறுத்தியுள்ளனர். அதற்கு குறித்த யுவதி மேலும் கொடுப்பதற்கு பணம் இல்லை என்று கூறியதையடுத்து வீட்டிலிருந்து வெளியேறுமாறு கூறிவிட் டனர். அதேவேளை குறித்த இளைஞனும் சகல தொடர்புகளையும் நிறுத்தியுள்ளார்.
இதனையடுத்து குறித்த யுவதி தனது சொந்த ஊரான மல்லாகத்துக்குச் சென்று தனது பெற்றோரிடம் இது குறித்து முறையிட்டுள்ளார். இதேவேளை தாம் திட்ட மிட்டு ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் தாம் வழங்கிய சீதனத் தொகையான 15 லட்சம் ரூபாவையேனும் உடன் திருப்பித் தருமாறும் கோரி வெள்ளவத்தைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றைச் செய்துள்ளார்.
இந்த முறைப்பாட்டைத் தொடர்ந்து குறித்த இளைஞனின் பெற்றோர் நீதிமன்றத்தில் வந்து விவாகரத்தைப் பெற்றால் தாங்கள் பணத்தைத் திருப்பித் தருவதாக தம்மிடம் தெரிவித்ததாக அந்தயுவதி தெரிவித்துள்ளார். பணம் பெறுவது ஒன்றையே நோக்க மாகக் கொண்டே குறித்த இளைஞனும் அவரது பெற்றோரும் இந்தத் திருமணத்தை நடத்தியுள்ளனர் என்று கூறும் அவர் இதனால் தனது வாழ்க்கையே சீரழிக்கப்பட்டு விட்டதாகவும் மிகுந்த கவலையுடன் தெரிவித்தார்.
கரும்பு கடிக்க கூலியும் கொடுத்தால் சும்மா இருப்பானா ?
ReplyDeleteThere are many LTTE diaspora criminels all over the world.
ReplyDeleteWhy those or girls are so idiuts?
இப்படிப்பட்ட தமிழ் நாயிகள், பேயிகள் கனடாவில் நிறைய இருக்கிறது. ஆனால் வெளியில் தெரிவதில்லை.
ReplyDeleteஅத்துடன் கனடாவில் தமிழ் பத்திரிகைகள், வானொலிகள் ஏனோ, தானோ இவற்றை வெளிப்படுத்துவதில்லை.
எவன் எப்படியானாலும் பரவாயில்லை. தங்கள் வியாபாரம், வருமானம் சரியாக இருந்தால் மட்டும் போதும் என்ற மனநிலை என்பதே முக்கிய காரணம், வெளிநாட்டு தமிழர்களுக்கு தன்னலம் என்பதே மிக முக்கியம்.
Canada CTR is only do Sound to LTTE and not for Tamil community.
ReplyDelete