தெஹிவளை மிருகக் காட்சிசாலையின் வருமானம் 11.6 வீதத்தால் அதிகரிப்பு!
2012 ஆம் ஆண்டுடன் ஒ்பபிடுகையில் தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் வருமானம் 11.6 வீதத்தால் அதிகரித்துள்ளதுடன் கடந்த வருடத்தில் 720 மில்லியன் ரூபாவை வருமானமாக ஈட்டியுள்ளதுடன் மிருகக் காட்சிச் சாலையை 15,46,450 பேர் பார்வையிட்டுள்ளனர்.
இதேவேளை பின்னவலை யானைகள் சரணாலயத்தையும் கடந்த வருடம் அதிகளவான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்டுள்ளதாக தரவுகள் தெரிவிப்பதுடன் தரவுகளின் படி கடந்த ஆண்டு பார்வையிட்ட சுமார் 7,20,000 பேரில் 2,78,000 ஆயிரம் பேர் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments :
Post a Comment