கனடாவில் உயர் கல்வியென கூறி 11 இலட்சம் ரூபா பணம் மோசடி செய்தவர் பிணையில் விடுதலை!
கனடாவில் உயர் கல்வி கற்பதற்காக மாணவன் ஒருவரு க்கும் மாணவி ஒருவருக்கும் விசா பெற்றுத் தருவதாகக் கூறி அந்த மாணவர்களின் தாயாரிடம் 11 இலட்சம் ரூபா பணத்தைப் பெற்று மோசடி செய்ததாகக் கூறப்படும் மாலபே செத்சிறி பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக நீர்கொழும்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிலையத்தின் உரிமை யாளர் தான் மோசடி செய்த பணத்தை வழக்கின் முறைப்பாட்டாளருக்கு திருப்பி கொடுக்க இணங்கியதை கருத்திலெடுத்த பிரதான நீதிவான் ஏ.எம்.என்.அமரசிங்க சந்தேக நபரை தலா பத்து இலட்சம் ரூபா கொண்ட இரு நபர்களின் சரீரப் பிணையில் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.
0 comments :
Post a Comment