பொலன்னறுவையில் கடும் மழை பராக்கிரம சமுத்திரத்தின் 10 வான்கதவுகள் திறப்பு!
பொலன்னறுவை மாவட்டத்தின் அநேகமான பகுதிகளில் மழை பெய்துவருவதால் பொலன்னறுவை, பராக்கிரம சமு த்திரத்தின் 10 வான்கதவுகள் இன்று முற்பகல் திறக்கப் பட்டதால் சமுத்திரத்தை அண்மித்த தாழ்நிலப்பகுதிகளில் வாழும் மக்களை அவதானத்துடன் இருக்குமாறு இடர் முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
அத்துடன் தொடர்ந்தும் மழை பெய்து வருவதால் சில பகுதிகளில் வெள்ளநீர் தேங்கி நிற்பதாக பொலன்னறுவை மாவட்ட செயலாளர் நிமல் அபேசிறி தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment