Friday, January 10, 2014

எல்.ரி.ரி.ஈக்கு அடுத்தது தலிபானா? தனது 10 வயது தங்கையை மனித வெடிகுண்டாக்க முயற்சித்த அண்ணண்!

தற்கொலை குண்டுத்தாக்குதல் நடத்துவதில் எல்.ரி.ரி.ஈ இயக்கமே பேர்பெற்றது. ஆனால் எல்.ரி.ரி.ஈ இயக்கம் அழிக் கப்பட்டதன் பின்னர் மற்றுமொரு பயங்கரவாத அமைப் பான தாலிபன்கள் அந்த காரியத்தை சிறப்பாக முண்னெ டுத்து வருகின்றனர். தமது பயங்கரவாத தாக்குதலுக்காக தாலிபன்கள் ஒரு பெண் தற்கொலைப் போராளியை அது வும் பத்து வயதேயான ஒரு சிறுமியை பயன்படுத்தியுள்ள சம்பவம் பொரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மூன்று நாட்களுக்கு முன்பு Spozhmai என்ற பெயரில் தன்னை அறிமுகப் படுத்திக்கொண்ட ஒரு சிறுமியை ஆப்கானின் தெற்கு ஹெல்மாந்த் மாகாணத்தில் வைத்து பாதுகாப்பு படையினர் கைது செய்தார்கள். பாதுகாப்பு படையினரின் முகாம் பக்கமாக நடந்து வந்த அந்தச் சிறுமி அப்போது ஒரு மனித வெடிகுண்டாக இருந்தாள். படையினரைப் பார்த்து பயந்த குறித்த சிறுமி வந்த காரியத்தை நிறைவேற்றாமல் விழித்து மாட்டிக்கொண்டாள்.

பரிசோதித்த அதிகாரிகளுக்குப் பெரும் அதிர்ச்சி. சிறுமியை கைதுசெய்து முகாமிற்கு அழைத்துச் சென்ற படையினர் விசாரித்ததில் அந்தச் சிறுமியின் மூத்த சகோதரன், பிராந்தியத்தில் ஒரு தாலிபன் கமாண்டராக இருப்பவன் என்றும் அவன் தான் வற்புறுத்தி, தன் தங்கையை மனித வெடிகுண்டாக அனுப்பி செக்போஸ்டைத் தகர்க்கச் சொன்னதாகவும் குறித்த சிறுமி படையினரிடம் தெரிவித்துள்ளாள்.

விவகாரம் அதிபர் ஹமீத் கர்சாய் வரைக்கும் போய்விட்டது. அந்தச் சிறுமி சொன்ன முகவரிக்கு ஆள் அனுப்பிப் பார்த்ததில் ஹமீது சாஹிப் என்னும் அவளது சகோதரன் வீட்டில் இல்லை. விஷயமறிந்து அவன் தலைமறைவாகிவிட்டான்.

விவகாரம் சூடு பிடிக்க, செத்தாலும் நாங்கள் பெண்களை, அதுவும் குழந்தைகளை எங்கள் காரியங்களுக்குப் பயன்படுத்துவதில்லை இது வெறும் கட்டுக்கதை எங்க ளுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தாலிபன்கள் அறிவித்திருக் கிறார்கள்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com