10,250 வீடுகள் வடக்கு கிழக்கு பகுதிகளில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது: இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம்!
இந்திய வீட்டுத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் வடக்கு கிழக்குப் பகுதிகளில் 2013 ஆம் ஆண்டு மட்டும் இலங்கை அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் 10,250 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாக இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
யுத்தத்தால் அகதியானவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட 43,000 இந்திய வீட்டுத்திட்டத்தில் 10,184 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது அதில் யாழ். மாவட்டத்தில் 1832 வீடுகளும் கிளிநொச்சி மாவட்டத்தில் 3090 வீடுகளும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 3540 வீடுகளும் மன்னார் மாவட்டத்தில் 1074 வீடுகளும் வவுனியா மாவட்டத்தில் 648 வீடுகளும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 66 வீடுகளும் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாக இந்திய உயர் ஸ்தானிகராலயம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதனைவிட 100 வீடுகள் நவீனமயப்படுத் தப்பட்டுள்ளதாகவும் ஒவ்வொரு வீட்டிற்கும் 250,000 ரூபா வீதம் வழங்கப்பட்டுள்ளதாகவும் 7.8 மில்லியன் ரூபா பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக வைப்பிலிடப் பட்டுள்ளதாக தெரிவித்துள்ளதுடன் இரண்டாம் கட்ட வீட்டுத் திட்டப் பணிகள் 2012 ஒக்டோபர் 2 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டதாகவும் 2014 ஆம் ஆண்டில் 16,000 வீடுகளை கட்டி முடிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் 2015 ஆம் ஆண்டில் 17,000 வீடுகளை கட்டி முடிக்க எதிர்பார்த்துள்ளதகாவும் இந்திய உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment