Thursday, January 9, 2014

நீதவானிடம் காலுறையை காட்டி, 10 இலட்சம் ரூபாவை இதற்குள் மறைக்க முடியுமா என கேட்ட கான்ஸ்டபிள் !!

கொழும்பு கறுவாக்காடு பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப் பிரி வின் பொறுப்பதிகாரி நளீன் ஜயசுந்தர வுக்கு எதிராக அதே பொலிஸ்நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிளான ஆனந்தலால் மத்துகம என்பவர் செவ்வாய்க்கிழமை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் சாட்சியளித்துள்ளார். காணாமல் போன வாகனம் ஒன்றிலிருந்த சுமார் பத்து இலட்சம் ரூபா பணத்தை தான் திருடியதாக பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி கூறுவது முற்றிலும் பொய்யானது என பொலி ஸ்கான்ஸ்டபிள் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

கடந்த மே மாதத்தில் கறுவாக்காடு பிரதேசத்தில் வாகனம் ஒன்று காணாமல் போயுள்ளது. அன்றைய தினம் இரவு ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண் டிருந்த தனக்கு பொலிஸ் கட்டுப்பாட்டறையிலிருந்து குறித்த வாகனம் தொட ர்பில் தேடிப் பார்க்குமாறு கட்டளை வந்தது. காணாமல் போன வாகனத்திலிருந்த 10 இலட்சம் ரூபா பணத்தை தான் திருடி காலுறைக்குள் மறைத்துக் கொண்டதாக பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி தன் மீது குற்றம் சுமத்துவதாக தெரிவித்தார். போலிஸ் கான்ஸ்டபிள் தனது காலுறையை நீதவா னிடம் காட்டி இதற்குள் 10 இலட்சம் ரூபாவை மறைக்க முடியுமா? என்று வினவியுள்ளார் .

குறித்த வழக்கை தொடர ஒரு மாதத்துக்கு முன்னர் தன்மீது பொய் வழக்கையாவது தொடர்ந்து சிறையில் அடைப்பதாக குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி மிரட்டியதாகவும் தெரிவித்தார். தனது பாதுகாப்பு தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுக்கு அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கொழும்பு மேலதிக நீதிவான் பிரியன்த பெரேரா வழக்கை பெப்ரவரி 12 திகதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.

No comments:

Post a Comment