வடக்கில் இன்று 10க்கும் குறைவான முகாம்களும்12 ஆயிரம் படையினருமே உள்ளனர்-ஜனாதிபதி
சர்வதேச நாடுகள் எதனைக் கூறினாலும் வடக்கில் இன்று 10க்கும் குறைவான இராணுவ முகாம்களே உள்ளது என் பதுடன், வடக்கில் நிலைக் கொண்டிருந்த இருந்த 70 ஆயிரம் இராணுவத்தினரை அரசாங்கம் 12 ஆயிரமாக குறைத்துள்ளது என யாழ்.தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையை இன்று (19.01.2014) திறந்து வைத்து உரையாற்றும் போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
மேலும் தேவேந்திரமுனையில் இருந்து பருத்தித்துறை வரை சுதந்திரமாக பயணம் செய்ய கிடைத்துள்ளமை தொடர்பில் நாட்டு மக்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியதுடன் நாட்டின் பாதுகாப்புக்காக மட்டுமே நாடு முழுவதும் இராணுவம் இருக்க வேண்டும் என்பதுடன் ஒரு இனத்தால் இன்னுமொரு இனத்தை எப்போதும் அடிமைப்படுத்த முடியாது என்றும் குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment