Saturday, January 25, 2014

பேஸ்புக் காதலனிடம் 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபா பணத்தை பறிகொடுத்த இளம் பெண்!

சமூக வலைத்தளமான பேஸ்புக் மூலம் அறிமுகமாகிய காதலனிடம் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபா பணத்தை இழந்த கண்டி -தெய்யன்வெல போதியங்கன மாவத்தை வசிக்கும் இளம் பெண்ணொருவர் கண்டி பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.


மலேசியாவில் தொழில் புரிந்து வருவதாக கூறிய குறித்த இளைஞருடன் இந்த பெண் இரவு பகலாக மேற்கொண்டு வந்த கருத்து பரிமாறல் ஊடாக இருவருக்கும் இடையில் காதல் ஏற்பட்டு இருந்த நிலையில் திடீரென யுவதியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட அந்த இளைஞர் தான் இலங்கை வந்துள்ளதாகவும் மலேசியாவில் இருந்து கொண்டு வந்த பொருட்களை சுங்க அதிகாரிகளிடம் இருந்து விடுவிக்க தேவையான இலங்கை ரூபாய்கள் தன்னிடம் இல்லை என்பதால் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாவை தருமாறு கேட்டுள்ளார்.

இதனையடுத்து கண்டி முல்கம்பளை பிரதேசத்தில் உள்ள வங்கி ஒன்றுக்கு வருமாறு கூறிய பெண், ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபா இளைஞரிடம் கொடுத்ததும் குறித்த இளைஞன் கொழும்பு செல்வதாக கூறி சென்றவர் குறித்து எந்த தகவலும் கிடைக்காததுடன் இளைஞரின் பேஸ்புக் கணக்கும் இரத்துச் செய்யப்பட்டிருந்ததையடுத்து கண்டி பொலிஸ் நிலையத்தில் அந்த பெண் முறைப்பாடு செய்துள்ளார். 

இதனை தொடர்ந்து கண்டி பொலிஸார் சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com