Friday, December 6, 2013

USA தம்பதிகளுக்கு அபூர்வமான ஒரேமாதியான 3 குழந்தைகள் பிறந்துள்ளனர் !!

கலிபோர்னியாவின் வடபகுதியில் ஒரு தம்பதியினருக்கு அபூர் வமான,இயற்கையாகவே கருவுற்ற ஒரேமாதிரியான 3-குழந்தை கள் பிறந்துள்ளதாக வைத்தியசாலை டாக்டர்கள் தெரிவித்துள்ள னர். கலிபோர்னியா என்ற இடத்தில் இச்சம்பவம் நடந்துள் ளது.அபி,பிறின்,லோறல் ஆகிய 3-குழந்தைகள் சட்டர் மெமோறி யல் வைத்தியசாலையில் குயின்சி என்ற இடத்தைச் சேர்ந்த ஹன்னா ரொம் ஹெப்னர் தம்பதிகளுக்கு பிறந்துள்ளன.

கருவுற்ற ஒரு தனி முட்டை மூன்றாக பிரிந்து 3 குழந்தைகள் உருவாகியுள் ளன.கருவுறும் மருந்து இல்லாமல் இவ்வாறு ஒரே மாதிரியான 3-குழந்தைகள் உருவாகுவது அதிசயம் எனவும் 1-மில்லியனுக்கு1, 100-மில்லியன்களுக்கு ஒன்று ஆகவே இவ்வாறு நடக்கலாம் என சட்டர் மருத்துவமனை பெண்கள் சேவைகள் இயக்குநர் டாக்டர். வில்லியம் ஹில்பேர்ட் தெரிவித்துள்ளார்.

அபி 3-இறாத்தல்கள் 2 அவுன்ஸ்கள் எடையும், பிரின் 3 இறாத்தல்கள் 11 அவுன்ஸ்கள் எடையும், லோறெல் 4 இறாத்தல்கள் எடையும் கொண்டுள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com