TNA யின் விஞ்ஞாபனத்திற்கு எதிரானமனு மீதான விசாரணை ஜனவரி 22 உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றது!
மாகாணசபை தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வெளி யிட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தை தடை செய்யுமாறு தாக் கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணைக்கான திகதி குறிக்கப்பட்டுள்ளது. இம்மனு மீதான விசாரணை ஜனவரி 22 ஆம் திகதி மூவர் அடங்கிய நீதிபதிகளின் முன்னிலை யில் உச்ச நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது.
பிரதம நீதியர் மொஹான் பீரிஸ் தலைமையிலான நீதிபதிகள் இம்மனுவை விசாரிக்கவுள்ளனர். தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் உட்பட 5 அமைப்புக்கள் இம்மனுவை தாக்கல் செய்துள்ளன.
தமிழ் தேசிய கூட்டமைப்பு கடந்த வட மாகாண சபை தேர்தலில் முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனம் பிரிவினைவாதத்தை ஊக்குவிப்பதாக இம்மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசியல் யாப்பு மீறப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment