Sunday, December 1, 2013

BMICH இல் தீ - நாசகார வேலை அல்ல!

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் நேற்று (30) காலை ஏற்பட்ட திடீர் தீ உடனடியாகவே முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பெற்றோல் கசிவு காரணமாக இத்தீ விபத்து ஏற்பட்டுள்ளதென விசாரணை மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

பண்டாரநாயக்க ஞாபகார்த்தசர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கண்காட்சி கூடத்திலேயே நேற்று (30) காலை 8.30 மணியளவில் தீ ஏற்பட்டது. இத் தீ விபத்தினால் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. அத்துடன், பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கண்காட்சிகள் வழமை போன்று இடம்பெறுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

24 வயது இளைஞர் ஒருவர் தான் புதிதாக கண்டுபிடித்த அடுப்பை கட்டடத் தொகுதியில் பயன்படுத்தியபோது, அதில் ஏற்பட்ட பெற்றோல் கசிவே தீ விபத்திற்கு காரணமென்றும் இது நாசகார வேலையல்ல என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

இதேவேளை, பொதுநலவாய மாநாட்டுக்கு அமைக்கப்பட்ட சர்வதேச ஊடக மத்தியஸ்தானத்தில் சேதம் ஏற்பட்டதாக பரவும் வதந்தியில் எவ்வித உண்மையுமில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment