குரங்கு கூட்டம் குதித்ததால் மோட்டார் சைக்கிளில் சென்றவர் பலி!!
குரங்குக் கூட்ட மொன்று திடீரென வீதியில் குதித்ததால் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கி ளொன்று வீதியை விட்டுவிலகி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் இறந்துள்ளார்.
இந்த சம்பவம் உப்புவெளி, அபயபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. அபயபுரம் 4 ம் மைல்கல் பிரதேசத்தினூடாக பயணம் செய்கையில் திடீரென குரங்குக் கூட்டமொன்று வீதியில் குதித்துள்ளது.
கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதியோரமிருந்த மரமொன்றில் மோதி விபத்துக்குள்ளானது. 27 வயதான ராஜா சங்கர் என்பவரே இவ்வாறு இறந்துள்ளார்.
0 comments :
Post a Comment