Tuesday, December 10, 2013

ஆசிய வரலாற்றில் முதல் தடவையாக அடுத்த வருடம் இலங்கையில் இளைஞர் திருவிழா!

ஆசிய நாடுகளின் வரலாற்றில் முதல் தடவையாக சர்வதேச இளைஞர் திருவிழா அடுத்த வருடம் மே மாதம் 7 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை கொழும்பில் நடைபெறவுள்ளது என அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று(10.12.2013) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இளைஞர் விவ­கார மற்றும் திறன் அபி­வி­ருத்தி அமைச்சர் டலஸ் அழப்பெரும தெரிவித்தார்.

மேலும் கருத்துத் தெரிவிக்கையில் இலங்கை வரலாற்றி முதற் தடவையாக பொதுநலவாய இளைஞர் மாநாடு கடந்த மாதம் ஹம்பாந்தோட்டை சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றதுடன் இதன்போது எமது இளைஞர்கள் சகல விதத்திலும் திறமைகளை வெளிப்படுத்தியிருந்தனர் இதனை கண்டு இம் மாநாட்டில் பங்கு பற்றிய சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள் வியந்து போனதோடு அடுத்த வருடம் இதனைவிட சிறப்பான ஒரு மாநாட்டை எவ்வாறு இலங்கையில் நடத்துவது எனவும் கூறியிருந்தனர்.

இந்தநிலையில் ஆசிய வரலாற்றில் முதல் தடவையாக நடைபெறவுள்ள சர்வதேச இளைஞர் திருவிழா அடுத்த வருடம் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபவத்தில் நடைபெறவுள்ளது இது பெருமைக்குரிய விடயமாகும் எனக்குறிப்பிட்டார்.

காரணம் இலங்கை வரலாற்று என்பதை விட ஆசிய வரலாற்றில் நடைபெறும் முதல் நிகழ்வு இதுவாகும் என்று குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com