கணவனைக் கொன்று மலசலக் குளியில் போட்ட மனைவிக்கு மரண தண்டனை!
கணவனைத் தாக்கி கத்தியால் குத்திக் கொன்று அவரது உடலை மலசலக் குளியில் வீசிய மனைவி மற்றும் இந்தச்சம்பவத்துடன் தொடர்புடைய ஆணொருவருக்கும் கேகாலை மேல்நீதிமன்ற நீதிபதி மேனகா விஜேசுந்தர மரணதண்டனை விதித்துள்ளார்.
1999 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 ஆம் திகதி அல்லது அதற்கண்மித்த தினத்தில் ருவன்வெல்ல பொலிஸ் பிரதேசத்தைச் சேர்ந்த பகுதியில் 41 வயதான நபரொருவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக குறித்த இருவரும் கைதுசெய்யப்பட்டு ருவன்வெல்ல மேல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வந்த நிலையிலேயே இன்று இந்த தீர்ப்பு விதிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment