சீதாவக்கபுர நகர மேயர் சுசில் பிரேமலால் பிந்துவிற்கு ஆதரவை வழங்கவும்!
அவிஸ்ஸாவெளை சீதாவக்கபுர நகர மேயர் சுசில் பிரே மலால் பிந்து 2 வது தடவையாக சமர்ப்பிக்கவுள்ள வரவு செலவு திட்டத்திற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமை ப்பின் ஆதரவை வழங்குமாறு ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் நிர்வாகத்திலுள்ள சீதாவக்கபுர நகர சபையில் சமர்பிக்கப்பட்ட வரவு செலவு திட்டம் அண்மையில் தோல்வியடைந்தது. இதனை 2வது முறையாகவும் சமர்பிப்பதற்கு நகர பிதா தீர்மானித் துள்ளார்.
நகர சபையின் செயற்பாடுகளை முன்னெடுத்து செல்வதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு உறுப்பினர்களின் ஆதரவை பெற்று தருமாறு நகர பிதா ஜனாதிபதி யிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
சீதாவக்க நகர பிதா சுசில் பிரேமலால் பிந்து இன்று முற்பகல் அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார். மேல் மாகாண அமைச்சர் உதய கம்மன்பில, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் அவிஸ்ஸாவளை அமைப் பாளரும், மாகாண சபை உறுப்பினருமான சுமித் விஜயமுனி சொய்ஸா உட்பட சகர சபையின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஏனைய கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களும் இதில் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment