Tuesday, December 10, 2013

தாயின் சடலத்தை குளிர்சாதனப் பெட்டியில் மறைத்து வைத்த மகன்

தனது 90 வயது தாயாரின் ஓய்­வூ­தியப் பணத்தைப் பெறு­வ­தற்­காக 54 வயது மக­னொ­ருவர், இறந்த தாயின் சட­லத்தை குளிர்­சா­தனப் பெட்­டியில் மறைத்து வைத்த சம்­பவம் பிரித்­தா­னி­யாவில் நடைபெற்றுள்­ளது.

பிரித்தானியாவின் ஷி­யரில் போர்ட்ஸ்­மவுத் நகரில் வசிக்கும் பிலிப் பரோ என்ற நபரே, இயற்கை மர­ண­ம­டைந்த தனது தாயா­ரான லூஸி பரோவின் உடலை சட்­டப்­பி­ர­காரம் நல்­ல­டக்கம் செய்­யாது குளிர்­சா­தனப் பெட்­டியில் மறைத்து வைத்­துள்ளார்.

ஆரம்­பத்தில் பிலிப் தனது தாயாரை படு­கொலை செய்­தி­ருக்­கலாம் என சந்­தே­கிக்­கப்­பட்­டது. எனினும், லூஸியின் பிரேத பரி­சோ­தனை அறிக்­கைகள் அவர் இயற்கை மரணம் எய்­தி­யதை உறுதிப்­ப­டுத்­தி­யுள்­ளன. இந்­நி­லையில் தனது தாயார் இறந்து விட்­டதை மறைத்து அவ­ரது ஓய்வூதிய அனு­கூ­லங்­களைப் பெற்­றமை மற்றும் தனது தாயாரின் சட­லத்தை உரிய முறையில் நல்­ல­டக்கம் செய்யத் தவ­றி­யமை ஆகிய குற்­றச்­சாட்­டுகள் பிலிப் மீது சுமத்­தப்­பட்­டுள்­ளன.

பிரித்­தா­னிய சட்டப் பிர­காரம் பிலிப் தனது குற்றங்களுக்காக கால வரையறையற்ற சிறைத்தண்டனையை அனுபவிக்க நேரிடு மென தெரிவிக்கப்படுகிறது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com