பிரேசில் தலைநகர் ரியோ டி ஜனரோவில் சுற்றுலாக் கடற்கரைகளில் பெண்கள் மேலாடையிலியின்றி நடமாட அனுமதிக்க வேண்டுமெனக் கோரி ஒரு சில பெண்கள் இணைந்து மேலாடையின்றி நடத்திய கவனயீர்ப்பு போராட்டம் தோல்வியில் முடிந்துள்ளது.
பிரேசிலில் பெண்கள் மேலாடையின்றி வெயில் காய்வதை (Sun Bathing) சட்டப்படி தடை செய்துள்ளது அந்நாட்டு அரசு எனினும் இது பெண்களின் தனிப்பட்ட சுதந்திரத்தை பாதிப்பதாக கூறி இதை எதுர்த்து நூற்றுக்கணக்கான பெண்கள் ரியோ கடற்கரையில் மேலாடையின்றி ஆர்ப்பாட்டம் செய்வதாக ஒரு அறிவிப்பு வெளியானது.
ஆனால் மேலாடையின்றிய பெண்களை பார்க்க வந்த கூட்டத்துடன் ஊடகவியலாளர்கள் மாத்திரமே போராட்ட இடத்திற்கு வந்துள்ளதுடன் இதனை வேறு எவரும் இதனைக் கவனிக்கவே இல்லையாம். இதனால் மேலாடையின்றி போராட முடிவெடுத்த பல பெண்கள் இம்முயற்சியிலிருந்து பின்வாங்கிவிட, ஒரு சில பெண்கள் மாத்திரம் கடைசியில் போராட்டத்தில் தனித்து கலந்து கொண்டதுடன் அவர்களுக்கு ஆதரவாக சில ஆண்களும் கலந்து கொண்டுள்ளனர்.
பிரேசில் கதாநாயகி கிரிஸ்டினா ஃபுலோர்ஸ் ஒரு முறை மேலாடையின்றி போட்டோ செஷன் ஒன்றுக்கு கலந்து கொள்ள முயற்சித்த போது காவல்துறையினர் அவரை அணுகி மேலாடையின்றிய புகைப்படமெடுப்பில் கலந்து கொள்ள வேண்டாம் என அறிவித்ததன் பின்னரே இவ்விவகாரம் சர்ச்சைக்கு உள்ளானது.
பிரேசிலில் 1940ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இச்சட்டத்தின் படி, மேலாடையின்றி பொது கடற்கரையில் பெண்கள் நடமாடுவது தெரிந்தால், 3 மாதம் தொடக்கம் 1 வருடம் வரை சிறைத்தண்டனை வழங்கப்பட வாய்ப்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment