பின்கால்கள் கால்கள் இரண்டுடன் பிறந்த ஆடு ஒன்று மனி தர்களைப் போல நடக்கக் கற்றுக்கொண்டுள்ளது. சீனாவின் ஷொஉகொஉ நகரின் லுயிஷெங் எனும் கிராமத்திலுள்ள இந்த கடந்த ஓகஸ்ட் மாதம் பிறந்துள்ளது. பிறப்பிலேயே முன் னிரு கால்களும் இழந்த இந்த ஆடு தானாக இரட்டைக் கால்களுடன் மனிதர்களைப் போல நடக்க ஆரம்பித்துள்ளது.
இது குறித்து ஆட்டின் உரிமையாளரான லின் கூறுகையில், 'நான் எனது 60 வயதுகளில் உள்ளேன். ஆனால் எனது வாழ்நாளில் இது போன்ற தொரு ஆட்டினைக் கண்டதில்லை. இந்த ஆடு விரைவில் இறந்துவிடும் என நினைத்தேன். எனவே எப்போது இது மரணிக்கும் என்று மட்டுமே பார்த்திருந்தேன்.
எவ்வாறெனினும் பிறந்து ஒரு மாதத்தின் பின்னர் இரட்டைக் கால்களுடன் நடக்க ஆரம்பித்து என்னை ஆச்சரிப்படுத்திவிட்டது இந்த ஆடு. எனத் தெரிவித்துள்ளார். இரட்டைக் கால்களுடன் நடக்க ஆரம்பித்தவுடன் அப்பகுதி முழுவதும் பிரபல்ய மாகியுள்ளது இந்த ஆடு. இதனையடுத்து இந்த ஆட்டில் ஆர்வம்கொண்ட 31 வய தான ஷியு வாங் சுமார் 10 ஆயிரம் ரூபாவுக்கு கொள்வனது செய்துள்ளார்.
தனது பல்கலைக்கழக ஆராய்ச்சிக்காக இவ்வாட்டினைப் பயன்படுத்தவுள்ளதாகவும் தனிமையிலுள்ள எனக்கு மனதளவில் இந்த ஆடு உற்சாகமளிப்பதாவும் வாங் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment