Tuesday, December 17, 2013

கூட்டமைப்பினரின் கோரிக்கைகள் அரசியல் நலன் சார்ந்தவை: கிளி.இராணுவ கட்டளை தளபதி!

இலங்கை இராணுவத்தைப் பொறுத்தவரை மத்திய அரசா ங்கம் அதுவும் ஜனாதிபதியே இராணுவத்துக்கு தளபதியாக இருக்கிறார் எனவே கூட்டமைப்பின் கோரிக்கையை ஏற்று இராணுவம் மாகாணசபைக்கு கட்டுப்பட வேண்டியது அவ சியமில்லை என கிளிநொச்சி இராணுவப் படையின் கட் டளை தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேரா தெரிவித் துள்ளார்.

மேலும் பயங்கரவாதத்துக்கு எதிராக போர்க்காலத்தில் இலங்கை இராணுவம் போரிட்டது எனினும் தற்போது அதே இராணுவம் அபிவிருத்திக்காக பாடுபடுவதுடன் மக்களை மீள்குடியேற்றும் நடவடிக்கைக்கு உதவி செய்துவருகின்றது எனக்குறிப்பிட்டதுடன் மீண்டும் ஒருமுறை பயங்கரவாத ஆயுதப் போராட்டம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் படையினர் கவனமாக இருப்பதாக உதய பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு மாகாணசபையில் ஆட்சியில் உள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு வடக்கில் இராணுவத்தினரின் பிரசன்னம் அதிகமாக உள்ளது என்று கூறிவருகிறனர் இது வெறுமனே அரசியல் நலன் சார்ந்தவை என்று பெரேரா குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com