அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவின் மகன் சமிந்த லக்மால் பிரேமஜயந்த தனது விவகாரத்து வழக்கில் தனக்கு சாதக மான தீர்ப்பை பெறுவதற்காக அமைச்சரின் அரசியல் பல த்தை பயன்படுத்தி வருவதாக தெரியவருகிறது. சமிந்த லக்மால் அமைச்சரின் செயலாளர்களில் ஒருவராக பணி யாற்றி வருவதுடன் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் குண்ட ர்களை பயன்படுத்தி மனைவிக்கு அச்சுறுத்தல்களை விடு த்து வருவதாக கூறப்படுகிறது.
சமிந்த லக்மால் கடந்த ஜூலை மாதம் தனது மனைவியை வீட்டில் இருந்து அடித்து விரட்டியதுடன், இரண்டு வயது மகனை பலவந்தமாக தூக்கி வந்து தனது பொறு ப்பில் வளர்த்து வருகிறார்.
மனைவி குழந்தையை பார்க்க அனுமதிப்பதில்லை. ஒரு முறை குழந்தையை பார் க்க சென்ற மனைவியையும் மனைவியின் தாயையும் கல்லால் அடித்து விரட்டியடித்துள்ளார்.
அமைச்சர் சுசில் பிரேம ஜயந்தவினால் கட்டுப்படுத்தக் கூடிய நீதிபதி ஒருவர் இருப்பதால் இவரது விவாகரத்து வழக்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அமைச்சரின் அதிகாரம் மற்றும் குண்டர் பலத்தை பயன்படுத்தி பலவந்தமாக தனக்கு சார்பான தீர்ப்பைப் பெற அமைச்சரின் மகன் முயற்சித்து வருவதாக மனைவி தரப்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment