ஹிக்கடுவ கடலில் மூழ்கி ரஷ்ய பிரஜை பலி
ஹிக்கடுவ கடலில் நீராடச் சென்ற ரஷ்ய பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக ஹிக்கடுவ பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (05) மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 43 வயதுடைய விக்டர் டயஸ் என்பரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சடலம் கராப்பிட்டி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை இன்று (06) இடம்பெறவுள்ளது.
0 comments :
Post a Comment