Wednesday, December 18, 2013

சிறந்த சிறுவர் நட்பு நாடுகளின் தெற்காசி பட்டியலில் இலங்கைக்கு முதலிடம்!

சார்க் அமைப்பிற்கு இணைவாக சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்களை எதிர்க்கும் தென்னாசிய வலய ஒன்றியம் மேற்கொண்ட கணிப்பின் மூலம் தெற்காசியாவின் சிறந்த சிறுவர் நட்பு நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு முதலிடம் கிடைத்துள்ளது.

கடந்த இரண்டு வருடகாலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக 292 பக்கங்களைக் கொண்டதாக அறிக்கை ஒன்றை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் மகளிர் விவகார மற்றும் சிறுவர் அபிவிருத்தி அமைச்சர் திஸ்ஸ கரலியத்த அறிக்கையை கையளித்தார்.

இந்த அறிக்கையில் சிறுவர்களின் உரிமைகளை பாதுகாத்தல், கல்வி மற்றும் சுகாதாரம் ஆகிய விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

எமது நாட்டுக்கு கிடைத்த வெற்றி தொடர்பாக கருத்துத்தெரிவித்த அமைச்சர் திஸ்ஸ கரலியத்த உலகில் எந்த நாட்டிலும் இல்லாத அளவு சிறுவர்கள் மீது அன்பு செலுத்தும் அரச தலைவராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காணப்படுவதுடன் இதற்கு என நேரம் ஒதுக்குவதாக குறிப்பிட்டார்.

இதேவேளை சிறுவர்களின் நலன் தொடர்பில் இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்கு சர்வதேச சமூகம் பாராட்டு தெரிவித்துள்ளதுடன் சிறுவர்கள் தொடர்பில் அக்கறை செலுத்தும் நாடுகளில் இலங்கை முன்னிலையிலிருப்பதாக தெற்காசிய பிராந்தியத்திற்கான சிறுவர் பாதுகாப்பு நிதியத்தின் பணிப்பாளர் கலாநிதி ரின்ச்சென் சொப்பேல் தெரிவித்ததாக எமது விசேட பிரதிநிதி ஜே.யோகராஜ் குறிப்பிட்டுள்ளார்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com