புலமைப் பரிசில் பரீட்சையை நிறுத்துவதாக நாங்கள் சொல்லவில்லையே! - கல்வியமைச்சர்
எதிர்காலத்தில் 5 தர புலமைப் பரிசில் பரீட்சை இல்லாமற் செய்யப்பட மாட்டாது எனவும், அதனது அமைப்பு மாத்திரமே மாறவுள்ளது எனவும் கல்வியமைச்சர் பந்துல குணவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், 2016 ஆம் ஆண்டாகும் போது இந்நாட்டில் தரம் 5 மாணவர்கள் 10,000 பேருக்கும் மேற்பட்டோருக்கு மேலும் புலமைப் பரிசில் வழங்குவதற்கு ஆவன செய்யப்படும் எனவும் கல்வியமைச்சர் தெரிவித்துள்ளார். அதாவது, 2016 ஆண்டாகும்போது தற்போது வழங்குகின்ற 15000 புலமைப்பரிசில்கள் 25000 ஆக அதிகரிக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
2016 இல் அடைவு மட்டத்தைப் பரிசீலிக்கும் பரீட்சைக்காக மிகக் குறைந்தளவில் வெட்டுப்புள்ளி வழங்கப்படுவதுடன், எந்தவொரு மாணாக்கரும் தாங்கள் விரும்பிய பிரபல பாடசாலைக்கு அநுமதி பெறும் வாய்ப்பும் வழங்கப்படும் எனக்குறிப்பிட்டுள்ள அமைச்சர், இவ்வாண்டின் இறுதிப் பகுதியாகும் போது நாட்டிலுள்ள அனைத்துப் பிரதேச செயலகங்களுக்கும் சிறந்த பாடசாலைகள் வழங்கப்பட்டுள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளார்.
எதுஎவ்வாறாயினும், மாணவர்கள் முகங்கொடுக்கும் அவலங்களும், பெற்றாரின் அவலங்களும் செலவுகளும் இல்லாமலாகும் வண்ணமே இந்தப் பரீட்சை முன்னெடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெளிவுறுத்தியுள்ளார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment