அத்துமீறி நுழைந்தால் கைது செய்வதை விட வேறுவழியில்லை!- கொலம்பகே
இலங்கை கடற்படை வங்காள விரிகுடாவை திறந்தவெளிச் சிறையாக்க முயல்வதாக கருணாநிதி கூறியிருந்தார். இலங்கை கடற்படை அப்படிச் செய்யவில்லை. இலங்கை கடற்படை தம்மை பாதுகாக்கும் நடவடிக்கையில் மட்டுமே ஈடுபடுவதாகவும், இலங்கை கடலில் அத்துமீறி மீன் பிடிக்க நுழையும் இந்திய மீனவர்களை கைது செய்யப்படுவார்கள் எனவும் கடற்படைத் தளபதி ஜயநாத் கொலம்பகே தெரிவி த்தார்.
பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் 'கடல் பேணுதல் மாநாடு-2013' இல் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அத்துமீறிய மீன்பிடியை தடுப்பதற்கான ஒரே வழி அவர்களை கைது செய்வதுதான். அதையே நாம் செய்கின்றோம். நாம் செய்வதெல்லாம் எம்மை பாதுகாப்பது மட்டுமேயாகும். நாம் அவர்களது விடயத்தில் தலையிடவில்லை. மீன்பிடித்துறை தமிழ்நாட்டின் வாழ்வாதார தொழிலாக உள்ளதென்பது நியாயம் தான் என்றும் அவர் கூறினார்.
இலங்கை மீனவர்களுக்கு மீன்பிடித்துறையே வாழ்வாதாரம் என கூறிய இலங்கைக் கடற்படைத் தளபதி இதுவே இங்குள்ள் பிரச்சினையின் பின்னணி என்றும் அவர் கூறினார்.
0 comments :
Post a Comment