Tuesday, December 3, 2013

ஐஸ்லாந்து வரலாற்றில் முதல் முறையாக துப்பாக்கி சூடு ஒருவர் பலி!

உலகிலேயே மிக குறைவான 3,22,000 மக்கள் தொகையை கொண்ட நாடான ஐஸ்லாந்து குற்ற விகிதங்கள் மிகவும் குறைவாக கொண்ட நாடு என்ற சிறப்பைக் கொண்டிருந்த நிலையில் நேற்று(02.12.2013) அங்கு முதன் முறையாக துப்பாக்கி சூட்டு சம்பவம் நடத்தப்பட்டதில் ஒருவர் பலியானதாக அந்நாட்டு காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

கிழக்கு ரெய்க்ஜவிக்கில் உள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வசித்த 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் அதிகாலை நேரத்தில் தன்னுடைய வீட்டில் பலமுறை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் அங்கிருந்த மற்ற குடியிருப்புவாசிகளை பத்திரமாக இடம்மாற்றியதுடன் அவனைத் தொடர்புகொள்ள எடுத்த முயற்சியும் தோல்வியில் முடிவடைந்தது.

இதனைத் தொடர்ந்து அந்த மனிதனுக்கும் காவல்துறையினருக்கும் இடையில நடைபெற்ற தாக்குதலில் காயமடைந்த 50 வயது மதிக்கத்தக்க அந்த மனிதன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது இறந்து போனான்.

இந்த சம்பவம் நடைபெற்றதிற்கான காரணத்தை அறிய விசாரணையை காவல்துறை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com