பயங்கரவாதத்திற்கு எதிராக பெற்ற வெற்றியை பாதுகாக்க வேணடியது அனைவரினதும் கடமை-ஜனாதிபதி
பயங்கரவாதத்திற்கு எதிராக பெற்ற வெற்றியை பாதுகாக்க வேணடியது அனைவரினதும் கடமையாகும் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் 14ம் ஆண்டு நிறைவு நிகழ்வினை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த வெற்றியானது கடுமையான போராட்டத்திற்கும், தியாகத்திற்கும் மத்தியில் பெற்றுக் கொண்ட பயங்கரவாதத்திற்கு எதிரான வெற்றியை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அனைவரினையும் சாரும் என குறிப்பிட்டதுடன் அனைத்து இன மக்களும் ஏனைய இனங்களை மதிக்க வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனை விட எமது அரசாங்கமானது மும்மொழிச் சமூகமொன்றை உருவாக்கும் முனைப்புக்களில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி மக்கள் நல இலக்குகளை அடைவதற்கு ஜனநாயக இடதுசாரி முன்னணி வழங்கி வரும் ஒத்துழைப்பு பாராட்டுக்குரியது என தனது வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment