எட்டு வருடங்களின் பின் மஹேல ஜயவர்த்தனவுக்கு பெண் குழந்தை !
இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் துடுப்பாட்ட வீரருமான மஹேல ஜயவாத்தன – கிறிஸ்டினா சிரிஸேன தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.மஹேலவ ஜயவர்த்தனவின் மனைவி கிறஸ்டினா குழந்தை பிறப் பினை எதிர்பார்த்து பாகிஸ்தான் அணியுடனான மட்டுப் படுத்தப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டியில் இரு ந்து சுய விருப்பின் பெயரில் விலகிக்கொண்டுள்ளார்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மஹேலவின் மனைவி பெண் குழந்தை ஒன்றை பிரசவித்துள்ளார். மஹேல – கிறிஸ்டினா ஜோடி கடந்த 2005ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 3ஆம் திகதி திருமணம் செய்து கொண்டனர்.இத்தம்பதியின் முதல் குழந்தை இதுவாகும்.
தனக்கு பெண் குழந்தை பிறந்ததை மஹேல ஜயவர்த்தன டுவிட்டரில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டுள்ளார்.
0 comments :
Post a Comment