Monday, December 16, 2013

இப்படியும் ஒரு கட்டணமா? பயணிகளின் நிறைக்கேற்ப விமானக் கட்டணம்!

சமோவா நாட்டு விமான நிறுவனானது பயணிகளின் நிறைக்கேற்ப தமது விமானக் கட்டணத்தை அறிவிடும் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது. உலகிலேயே முதல்முறையாக சென்ற ஆண்டிறுதியில் குறித்த திட் டத்தை சமோவா ஏர் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. அப்போது இந்த திட்டம் எந்தளவுக்கு வெற்றியடையும் என்ற கேள்வி எழுந்தது.

ஆனால், குறித்த திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டு வருவதாகவும், ஏனைய விமான நிறுவனங்களின் கட்டணத்தையும் விட குறைவான கட்டணத்தைத்தான் பல பயணிகள் செலுத்தி வருகின்றனர் என சமோவா நாட்டு விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதிக எடையுள்ள பயணிகள் விமானத்தில் பயணிக்கும்போது அவர்களுக்கு ஒதுக்கப்படும் இருக்கையில் அமரமுடிவதில்லை. இதனால் இவர்களுக்கு மேலதிக இருக்கைகளை ஒதுக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இப்பிரச்சினையைத் தீர்க்க பயணிகளுக்கு அவர்களின் எடைக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டது என இந்த நாட்டு விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சமோவா ஏர் நிறுவனத்தின் தலைமை அதிகாரி தெரிவிக்கையில், பொதுவாக சர்வதேச அளவில் செயல்பட்டு வரும் விமான நிறுவனங்களுக்கு ,இணையாகவே எங்கள் எடைக் கட்டணம் உள்ளது. 120 கிலோ எடை மற்றும் அதற்கு குறைவானவர்களுக்கு கட்டணம் அதிகமாக இருக்காது.

இதைவிட அதிக எடையுள்ளவர்கள் அமர கூடுதல் இடம் தேவைப்படுவதால் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எங்கள் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து பல்வேறு விமான நிறுவனங்கள் ஆலோசனை மேற்கொண்டுள்ளன என்றார்.

குறித்த விமானக் கட்டண முறையைப் பின்பற்றுவது குறித்து பல்வேறு விமான நிறுவனங்கள் ஆலோசித்து வருவது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com