இலங்கையர் தற்போது புகலிடம் கோர வேண்டிய அவசியம் இல்லை! புகலிடம் கோரிக்கை எல்லாம் பொருளாதார நோக்கத்திற்கே!
இலங்கை நல்லிணக்கத்தை நோக்கிப் பயணிப்பதால் வேறு நாடுகளில் புகலிடம் கோர வேண்டிய அவசியம் இலங்கை யருக்கு இல்லை என அவுஸ்திரேலியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் வைஸ் அத்மிரால் திசர சமரசிங்க தெரிவித் துள்ளார்.
இலங்கையர்கள் புகலிடம் மற்றும் அகதி அந்தஸ்த்து கோரி அவுஸ்திரேலியாவிற்குள் நுழைய வேண்டிய தேவை இல்லை ஆனால் சில இலங்கையர்கள் பொருளாதார நோக்கங்களின் அடிப்படையில் அவுஸ்தி ரேலியாவில் புகலிடம் கோரி வருகின்றனர் என தெரிவித்த அவர் சர்வதேச அளவில் இலங்கை மீது சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்களில் உண்மை இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment