கொடிகாமம் பொலிஸாரைத் தாக்க முற்பட்ட சந்தேக நபர் கைது!
கொடிகாமம் பொலிஸாரைத் தாக்குதவதற்கு முற்பட்டவர் களில் ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் சாவகச்சேரி பொலிஸார் நேற்று திங்கட்கிழமை (16.12.2013) இரவு கைது செய்துள்ளதுடன் அவரிடமிருந்து கசிப்பு போத்தல்களும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அவரை இன்று செவ்வாய்க் கிழமை (17) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி சந்தேக நபரை கொடிகாமம் பகுதியில் பொலிஸார் அடையாளம் கண்டு கொண்டு அவரைப் பிடிக்க முயன்றபோது, இவர் அங்கிருந்து தப்பியோடியதை தொடர்ந்து துரத்திச்சென்று மட்டுவில் பகுதியில் வைத்து கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
0 comments :
Post a Comment