ஆளுநரையும் இராணுவத்தினரையும் வடக்கிலிருந்து விரட்டுவதற்கான பிரேரணை வெற்றி பெறுகிறது!
2014 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு பிரேரணை நேற்று முன்வைக்கப்பட்டது. அத்தோடு மாதாந்தக் கூட்டத்தின்போது, வடக்கில் ஆளுநர் பதவிக்கு பொதுமக்களில் ஒருவர் நியமிக்கப்பட்டு வடக்கில் சிவில் பரிபாலனம் முன்னெடுக்கப்பட வேண்டும் எனும் இரண்டு பிரேரணைகள் முன்வைக்கப்பட்டு அவை வெற்றிபெற்றுள்ளன.
வட மாகாண சபை உறுப்பினர் கே. சிவலிங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள அந்த இரண்டு பிரேரணைகளையும் ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாகவும் தெரியவருகின்றது.
தற்போது வட மாகாண சபையின் ஆளுநராக ஜீ.ஏ. சந்திரசிரி கடமையாற்றுகின்றார்.
முதலமைச்சர் விக்னேஷ்வரன் வரவு செலவு அறிக்கையை முன்வைத்து குறிப்பிடும்போது, மத்திய அரசாங்கத்திடமிருந்து வட மாகாணத்திற்கு சிறு தொகையே ஒதுக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார். அதனால் வெளிநாட்டு உதவியைக் கோரவேண்டிய தேவை தங்களது மாகாண சபைக்கு ஏற்பட்டுள்ளது எனவும், மத்திய அரசாங்கம் அதற்குத் தடையாக இருக்க்க் கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment