பனாகொட இராணுவ முகாமில் நடைபெற்ற விருந்தோ ம்பல் நிகழ்வில் முல்லைத்தீவு பிரதேசத்தைச் சேர்ந்த நாற்பது தமிழ் மாணவர்கள் அண்மையில் கலந்துகொண் டனர். அத்துடன் அவர்கள் இராணுவ அணிநடை மற்றும் பேண்ட் வாத்தியம் ஆகியவற்றையும் பார்வையிட்டனர். இராணுவத்தினருடன் அவர்கள் சுதந்திரமாக பழகும் வாய்ப்பும் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
முல்லைத்தீவு மகா வித்தியாலத்தைச் சேர்ந்த 16 மாணவர்களும் வித்தியானந்த மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த 24 மாணவர்களும் இணைந்து கடந்த 11, 12. ஆகிய தினங்களில் கொழும்பில் சுற்றுலா ஒன்றை மேற்கொண்டனர். ஆசிரியர்களும் பெற்றோரும் இணைந்த இந்த சுற்றுலாவை முல்லைத்தீவு பாதுகாப்பு தலைமை யகம் ஏற்பாடு செய்திருந்தது.
இந்த மாணவர்கள் குழுவினர் கொழும்பின் முக்கிய இடங்களான அரும்பொருள் காட்சியகம், துறைமுகம் மற்றும் காலி முகத்திடல் ஆகியவற்றுக்கும் விஜயம் செய்தனர்.
No comments:
Post a Comment