Saturday, December 21, 2013

கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் நேச்சல் சந்துவுக்கும் இடையிலான திடீர் சந்திப்பு நேற்று!

இலங்கை பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ வுக்கும் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பிரதி நிதி நேச்சல் சந்துவுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று கொழும்பிலுள்ள இலங்கை பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றுள்ளது.

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பிரதிநிதி நேச்சல் சந்து இலங்கைக்கு திடீர் பயணத்தை மேற்கொண் டிருந்த நிலையில் நேற்று மாலை இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இவர்களது சந்திப்பு அப்போது இலங்கைக்கான இந்திய தூதர் யஷ்வந்த்குமார் சின்கா உடன் இருந்தார்.

இந்த சந்திப்பின் போது இவர்களின் பேச்சு விவரம் வெளியிடப்படவில்லை. இருநாட்டு நலன்கள் தொடர்பாக பேச்சுகள் நடந்தது என குறிப்பிடப்பட்டது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com