இறக்கும் தருவாயில் மனைவியிடம் தன்னை குத்தியது யார் என தகவல் அளித்த சாரதி.....
தங்கொட்டுவ - இரபடகம பகுதியில் நபரொருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.நேற்று (04) இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித் துள்ளனர்.
சிங்ககம்மானய - வைகால பகுதியைச் சேர்ந்த 33 வயதான முச்சக்கர வண்டி சாரதி ஒருவரே இவ்வாறு பலியாகியுள்ளார்.
சம்பவம் இடம்பெற்ற போது தனது மனைவிக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட இவர்,குமாரகேவின் மகன் கத்தியால் தன்னை குத்தியதாக கூறியுள் ளார்.மரணத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.சந்தேகநபரைக் கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments :
Post a Comment