வீட்டுக்கு பார்சலில் வந்த விஷப் பாம்பு ! !
டெல்லியில் உள்ள தர்யாகஞ்ச் பகுதியில் தொழிலதிபர் ஒரு வரின் வீட்டுக்கு, பார்சலில் பாம்பு அனுப்பப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கொடுத்துச் சென்ற பார்சல் மீது தொழிலதிபர் மொகமத் கமீல் மனைவியான ஷமா பர்வீணுக்கு சந்தேகம் மேலிட அவர் தன் கணவனிடம் அதைத் தெரிவித்தார். கமீலில்ன் வீட்டிற்கு அருகேயுள்ள வண்ணான் கடையில் இந்த பார்செல் கொடுக்கப்பட்டுள்ளது. தொழிலதிபர் வீட்டில் அதனை ஒப்படைக்கும்படி நபர் ஒருவர் கூறியபடி பார்சல் வீட்டில் ஒப்படைக்க ப்பட்டது.
பார்செல் மீது சந்தேகம் இருந்ததால் பொலிஸ், வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.நீண்ட நேர சோதனைக்குப் பிறகு அட்டைப் பெட்டியில் வெடிகுண்டு இல்லை என்று தெரிந்தது.அதன் படி பார்சலைப் பிரித்தபோது விஷப் பாம்பு ஒன்று அதில் உயிருடன் இருந்ததைக் கண்டு தொழிலதிபரும், பொலிசும் அதிர்ச்சியடைந்தனர்.
பார்சலில் பாம்பை அனுப்பும் அளவுக்கு அவருக்கு தொழில் விரோதிகள் யார் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.இது நடந்தது செவ்வாய்கிழமை யென்றாலும் பொலிஸார் இதுகுறித்த தகவலை இன்றுதான் வெளியிட்டுள்ளனர்.
0 comments :
Post a Comment