பயங்கரவாத செயலை மேற்கொள்ள திட்டமிட்டிருந்த புலிகள் இயக்க உறுப்பினருக்கு ஒருவருட கடூழிய சிறை!
புலிகள் இயக்கத்தின் தலைவர் ஒருவருக்கு கொழும்பில் தங்குமிடவசதியை ஏற்படுத்திக்கொடுத்தார் என்று குற்றஞ் சாட்டப்பட்டிருந்த ஒருவரை குற்றவாளியாக இனங்கண்ட கொழும்பு மேல் நீதிமன்றம் அவருக்கு ஒருவருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதியான பிரித் பத்மன் சுரசேன என்பவரே இவ்வாறு தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.
புலிகள் இயக்கத்தலைவர் ஒருவருடன் இணைந்து கொழும்பில் பயங்கரவாத செயலை மேற்கொள்ள திட்டமிட்டிருந்ததாகவும் புலிகளின் இயக்க உறுப்பினர் என்று கூறப்படும் மகேஷ் கிறிஸ்தோபர் விஜேந்திரன் என்பருக்கு எதிராகவே இவ்வாறு குற்றச்சாட்டப்பட்டிருந்தது.
நேற்று அவருக்கு எதிராக நடைபெற்ற வழக்கில் அவருக்கு எதிராக சுமத்தப் பட்டிருந்த குற்றங்கள் வாசித்து காட்டப்பட்டது இதனை தொடர்ந்து குற்றப்பத்தி ரிகையிலிருந்த அந்த குற்றங்களை அவர் ஏற்றுக்கொண்டதையடுத்து அவரை குற்றவாளியாக இனங்கண்ட நீதிமன்றமே மேற்குறிப்பிட்ட தீர்ப்கை அளித்தது.
1 comments :
50$ is Little too much, in singapore at geylang red light area costing sri lankan Girls for 15S$
Post a Comment