சி.வி. விக்னேஸ்வரன் தற்போது வரவேற்புக்களை விரும்பவில்லையாம்!
தழிழ் தேசியக் கூட்டமைப்பு வடக்கு மாகாண சபையைப் பொறுப்பேற்று இன்னமும் சரியான எந்த செயற்பாடுகளை யும் மேற்கொள்ளவில்லை எனவும், மக்களுக்கு ஏதாவது செய்ததன் பின்னரே வரவேற்புகளை நான் விரும்புகின் றேன் எனவும், ஆனால் மக்கள் விரும்பிச் செய்யும் இந் நிகழ்வுகளை ஏற்காமல் அவர்களது மனங்களைப் புண்படுத் தக்கூடாது என்பதற்காகவே இவ்வாறான விழாக்களில் கலந்துகொள்கின்றேன் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மக்களின் விருப்பங்களை நடைமுறைப்படுத்த இரண்டு வருடங்களாவது அதற்குச் செல்லவேண்டும். அதுவரை வரவேற்புகளைப் பெற்றுக்கொள்ள நான் விரும்ப வில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
பருத்தித்துறை நவீன சந்தைக் கட்டிடத்தைச் சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைத்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
0 comments :
Post a Comment