அன்று விஜயகுமார தமிழ் யுவதியொருத்தியையே திருமணம் செய்தார்!
சிங்களவர்களிடையேயும் தமிழர்களிடையேயும் சிறந்த்தொரு நட்புறவை வளர்ப்பதற்கு முதலில் அவர்களுக்கு சிங்கள – தமிழ் உறவுமுறை பற்றித் தெளிவுறுத்த வேண்டும் என தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர் வீ. ஆனந்த சங்கரி குறிப்பிடுகிறார்.
“இப்போது தெற்கில் வாய் கிழியக் கத்துகின்ற சில சிங்கள அரசியல்வாதிகள் இந்நாடு சிங்களவர்களின் நாடு எனக் குறிப்பிடுகிறார்கள். என்றாலும் அன்று இளவரசன் விஜயன் உட்பட படைவீர்ர்கள் 700 பேரும் தரையிறங்கி விஜயன் மதுராபுரையைச் சேர்ந்த தமிழ் யுவதியொருத்தியையே திருமணம் செய்தான். அதனால் அரைவாசி தமிழ். அரைவாசி. நான் மகாவம்சத்திற்கு ஏற்பவே கதைக்கின்றேன்.
அதனால் தமிழர்கள் சிங்களவர்களுக்கு எதிராகவோ, சிங்களவர்கள் தமிழர்களுக்கு எதிராகவோ செயற்பட முடியாது” எனவும் அவர் கருத்துரைத்துள்ளார்.
(கேஎப்)
1 comments :
இவர்களுக்கு கூட்டமைப்பால் விரட்டி ஒதுக்கி விட்ட பின்பு தான் புத்தி வருகின்றது.
Post a Comment