Friday, December 20, 2013

கொலைக்குற்றம் நிரூபனம்! நால்வருக்கு மரணதண்டனை விதித்தது மொனராகலை நீதிமன்றம்!

கைக்குண்டு தாக்குதலை மேற்கொண்டு பொலிஸ் உத்தி யோகத்தர் ஒருவரை கொலை குற்றத்துடன் தொடர்புடைய நால்வருக்கு மொனராகலை மேல் நீதிமன்ற நீதிபதி இன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார். 2002.06.14ம் திகதி படல்கும்புர பொலிஸ் பிரிவில் வெஹெரகொட பிரதேசத்தில் கைக்குண்டு தாக்குகுதலை மேற்கொண்டு பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை கொலை செய்ததுடன் மேலும் மூன்று பொலிஸாருக்கு காயம் ஏற்படுத்தியதாக நால்வர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

குறித்த வழக்கில் நீண்ட விசாரணையின் பின் இன்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்டுள்ள பிரியந்த திஸாநாயக்க, ரொசான் திஸாநாயக்க, ரவி எனப்படும் தம்மிக்க குமார மற்றும் பெட்டா எனப்படும் சமிந்த புஸ்பகுமார ஆகிய நால்வருக்கு மொனராகலை மேல் நீதிமன்ற நீதிபதி மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

No comments:

Post a Comment