வாகன ஓட்டுநர்களுக்கு இனி கடுமையான சட்டங்கள்:சீ.பி.ரத்னாயக்க!
எதிர்வரும் காலங்களி்ல் வாகன ஓட்டுநர்கள் தொடர்பில் புதிய கடுமையான சட்டங்களை அமுல்படுத்தப்போவதாக தெரிவித்த தனியார் போக்குவரத்து துறை அமைச்சர் சீ.பி.ரத்னாயக்க மோட்டார் சைக்கிள்களில் தலைக்கவசம் இல்லாமல் மற்றும் ஒரு கைப்பிடியை மட்டும் பிடித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளை செலுத்துதல் மற்றும் தொலைபேசியி்ல் உரையாடிக் கொண்டு வாகனம் செலுத்துவோருக்கு எதிராகவே கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று(13.12.2013)வெள்ளிக்கிழமை நடைபெற்ற போக்குவரத்து அமைச்சு மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் ரத்னாயக்க இதனைத் தெரிவித்ததுடன் பாடசாலை பஸ்களில் பயணிக்கும் பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அப்பிள்ளைகளின் பெற்றோருக்கு குறுஞ்செய்தி அனுப்பும் முறைமையொன்றும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது எனக்குறிப்பிட்டார்.
மேலும் பஸ் சேவையை சிறப்பான முறையில் நடத்துவதற்கு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதுடன் பஸ்ஸில் சீ.சீ.டிவி மற்றும் ஜீ.பி.எஸ் என்பன பொருத்தப்படவுள்ளதுடன் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் பயணிகளுக்கு நல்ல சேவைகளை சரியான முறையில் முன்னெடுக்கின்றார்களா என்பது தொடர்பாகவும் கண்காணிக்கப்படவுள்ளது எனக்குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment